டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

நாளை நடைபெற உள்ள நிதி ஆயோக் நிர்வாகக்குழு கூட்டத்தில் பங்கேற்க இன்று காலை முதல்வர் ஸ்டாலின் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு T.R.பாலு, திருச்சி சிவா உள்ளிட்ட திமுக எம்.பி.க்கள் புடைசூழ ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள பொதிகை தமிழ்நாடு இல்லத்தில் இன்று தங்கும் ஸ்டாலின் தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்றும் தமிழ்நாடு கேடரை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை சந்திக்கவுள்ளார்.
Tags :