ராணுவ உடையில் மீட்புப் பணிகளை பார்வையிட்ட மோகன் லால்

by Staff / 03-08-2024 11:43:18am
ராணுவ உடையில் மீட்புப் பணிகளை பார்வையிட்ட மோகன் லால்

வயநாடு அருகே முண்டக்கையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள இடத்தில் நடைபெறும் மீட்புப் பணிகளை நடிகர் மோகன்லால் நேரில் சென்று பார்வையிட்டார். ராணுவத்தில் கௌரவ பதவியில் உள்ள நடிகர் மோகன்லால், சீருடையில் சென்று பாதிப்புகள், மீட்பு, நிவாரண பணிகள் குறித்து சக ராணுவத்தினரிடம் கேட்டறிந்தார் . இதுவரை வயநாடு நிலச்சரிவில் சிக்கி 344 பேர் உயிரிழந்த நிலையில், காணாமல் போன 200 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
 

 

Tags :

Share via