பாஜகவுக்கு ஒத்து ஊதும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதனுக்கு கண்டனம்- திமுக துணை பொதுச்செயலாளர்பொன்முடி

by Admin / 27-05-2026 02:59:12pm
பாஜகவுக்கு ஒத்து ஊதும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதனுக்கு கண்டனம்-  திமுக துணை பொதுச்செயலாளர்பொன்முடி

பாஜகவுக்கு ஒத்து ஊதும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதனுக்கு கண்டனம் தெரிவித்து திமுக துணை பொதுச்செயலாளர் முன்னாள் கல்வி அமைச்சருமான பொன்முடி வலைதள பதிவு

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் வேந்தராக முதலமைச்சரை நியமிக்கும் சட்டமுன் வடிவினை கழகத் தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான கழக ஆட்சியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், சிபிஐ, சிபிஎம், அதிமுக, மதிமுக உள்ளிட்ட பாஜக அல்லாத அனைத்து கட்சிகளின் ஆதரவோடு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அச்சட்டம் ஆளுநர் வழியாக குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட சட்ட முன் வடிவுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக்கழக அரசின் உயர்கல்வித்துறை அமைச்சரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான திரு. விஸ்வநாதன் ஆளுநரை பல்கலைக்கழக வேந்தராக நீடிக்கலாம் என்று கருத்து தெரிவித்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியதாகும். மேலும் இது மாநில உரிமைகளுக்கு எதிரானது ஆகும். ஒன்றிய பாஜக அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநரை பல்கலைக்கழக வேந்தராக தொடலாம் என்று பாஜகவுக்கு ஒத்துபோதும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் விஸ்வநாதனின் கருத்து பாஜக அரசியல் அடிவருடியாக காங்கிரஸ் மாறிவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. இச்சட்டம் நிறைவேறுவதற்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவரே இன்றைக்கு அதற்கு எதிராக பேசுவது என்பது பதவி சுகத்துக்காக காங்கிரஸ் கட்சி தனது கொள்கையை மாற்றிக் கொண்டதாக தெரிகிறது. இதை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடுமையாக கண்டிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo