கேரளா புதிய முதலமைச்சராக வி.டி. சதீசன் தலைமையிலான 21 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பதவி ஏற்பு
கேரளா காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் நூத்தி இரண்டு இடங்களை வென்று ஆட்சி அமைக்கிறது. புதிய முதலமைச்சராக வி.டி. சதீசன் தலைமையிலான 21 பேர் கொண்ட புதிய அமைச்சரவை இன்று காலை 10 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேடியத்தில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் பதவி ஏற்கிறார்கள். முதலமைச்சரையும் சேர்த்து மொத்தம் 21 அமைச்சர்கள் இன்று பதவி ஏற்கிறார்கள். முதலமைச்சர்வி.டி. சதீசன் உட்பட 11 அமைச்சர்கள் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்கள். இவர்களில் ரமேஷ் சென்னிதலா, கே ..முரளிதரன், கே .பி. சி. சி. தலைவர் சன்னி ஜோசப் ஆகியோர் அடங்குவர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஐந்து அமைச்சர் பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கேரளா காங்கிரஸ், ஆர். எஸ். பி. சி. எம் பி மற்றும் கேரளா காங்கிரஸ் ஆகிய கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணன் சபாநாயகர் ஆகவும் சாணி மோல் உஸ்மான் துணை சபாநாயகர் ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த 50 ஆண்டுகளில் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் முழு அமைச்சரவையும் ஒரே நேரத்தில் ஒன்றாக பதவி ஏற்பது இதுவே முதல் முறையாக சொல்லப்படுகிறது இந்த பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி, கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா, தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட முக்கிய கட்சி ஆட்சியாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
Tags :


















