இருசக்கரவாகனங்களுக்கும்,,வீடுகளுக்கும் தீ வைப்பு பேருந்து கண்ணாடி உடைப்பு.-வதந்திகளை நம்பவேண்டாம்.

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல் சரகத்திற்குட்பட்ட வடகாடு இந்தியன் பெட்ரோல் பங்க் அருகே 05.05.25-ம் தேதி 21.30 மணியளவில் இரண்டு சமூகத்தைச் சேர்ந்த நபர்களுக்குமிடையே யார் முதலில் பெட்ரோல் போடுவது என வாய்தகராறு ஏற்பட்டுஇருதரப்பு மோதல் வன்முறையாக வெடித்த நிலையில், பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. நேற்றிரவு நடந்த வன்முறையின் போது வீட்டிற்கும், இருசக்கர வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. அரசுப் பேருந்தின் கண்ணாடியும் உடைக்கப்பட்ட நிலையில், வடகாடு வழியாக செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டது. இருதரப்பு மோதல் வெடித்தது. இது தொடர்பாக 14 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனிடையே நள்ளிரவில் விசிகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை காவல்துறை விளக்கம்!
X வலைதளத்தில் இரு சமூகத்தினர் இடையே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட பிரச்சனையில் குடியிருக்கும் பகுதியில் வீடுகளுக்கு தீவைப்பு, 5 பேருக்கு அரிவாள் வெட்டு, காவல்துறையினர் 4 பேர் காயம் மற்றும் காவல் ஆய்வாளருக்கு தலையில் வெட்டுக்காயம் என்று பரவும் வதந்திகளை நம்பவேண்டாம் என்றும், மேலும் இவ்வாறு வதந்திகளை பரப்புபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது என்று காவல்துறை விளக்கம்.
Tags : புதுக்கோட்டை காவல்துறை விளக்கம்! X வலைதளத்தில் இரு சமூகத்தினர் இடையே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட பிரச்சனையில் குடியிருக்கும் பகுதியில் வீடுகளுக்கு தீவைப்பு, 5 பேருக்கு அரிவாள் வெட்டு, காவல்துறையினர் 4 பேர் காயம் மற்றும் காவல் ஆய்வாளருக்கு தலையில் வெட்டுக்காயம் என்று பரவும் வதந்திகளை நம்பவேண்டாம் என்றும், மேலும் இவ்வாறு வதந்திகளை பரப்புபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது என்று காவல்துறை விளக்கம்.