கோட்டாரில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த வாலிபர் கைது.

by Staff / 11-01-2024 03:29:07pm
கோட்டாரில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த வாலிபர் கைது.

நாகர்கோவில் இருளப்பபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கோட்டார் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரகசியமாக கண்காணித்தனர். பின்னர், அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சந்தேகத்தின் பேரில் திடீரென நுழைந்து சோதனை செய்தனர். அப்போது, அந்த வீட்டில் பின் பகுதியில் ஒரு பையில் 330 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவற்றை விற்பனைக்காக அங்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்துபோலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ராதாகிருஷ்ணன் (வயது 23) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

Tags :

Share via

More stories

Logo