கோதுமை மீதான இறக்குமதி வரி குறைப்பு
மத்திய அரசின் உணவுத்துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா கூறுகையில், கோதுமை மீதான இறக்குமதி வரியை குறைக்க அல்லது நீக்குவதற்கான திட்டத்தை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. இந்தியாவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த அரசு உறுதியாக உள்ளது என்றார். கோதுமை இறக்குமதி செய்வதற்கு ரஷ்யாவிடம் இருந்து எந்த முன்மொழிவும் வரவில்லை என்று அவர் கூறினார். இருப்பினும், கோதுமை விநியோகத்தை அதிகரிக்க இந்தியா இறக்குமதி வரியை 40% குறைக்கலாம், என்றார். பஞ்சாப், ஹரியானா, மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிகளவில் கோதுமை உற்பத்தி வெய்யப்படுகிறது.
Tags :



















