மீண்டும் பாஜகவில் இணைந்த திருச்சி சூர்யா

by Staff / 02-11-2023 04:35:49pm
மீண்டும் பாஜகவில் இணைந்த திருச்சி சூர்யா

பாஜகவில் இருந்து வெளியேறிய திருச்சி சூர்யாவை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்வதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். அதோடு, அவர் முன்பு வகித்த ஓபிசி அணி மாநில பொதுசெயலாளர் பதவியும் வழங்கப்படுகிறது. கட்சியின் பெண் நிர்வாகி மருத்துவர் டெய்சியை போனில் தகாத வார்த்தைகளில் திட்டியதால் சூர்யா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அது தொடர்பான விசாரணை அறிக்கை சூர்யாவுக்கு சாதகமாக இருப்பதால் அவர் மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். சமீப நாட்களாக அவர் அதிமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், மீண்டும் பாஜகவிலேயே இணைந்தார்.

 

Tags :

Share via

More stories