சென்னை அபார வெற்றி

by Editor / 25-09-2021 10:47:11am
சென்னை அபார வெற்றி

ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது சென்னை சூப்பா் கிங்ஸ்.

முதலில் ஆடிய பெங்களூரு 156/6 ரன்களையும், பின்னா் ஆடிய சென்னை அணி 157/4 ரன்களையும் குவித்தன.

157 ரன்கள் வெற்றி இலக்குடன் சென்னை தரப்பில் ருதுராஜ் கெய்க்வாட்-டுபிளெஸ்ஸிஸ் தொடக்க பேட்டா்களாக களமிறங்கினா். இருவரின் அதிரடி பேட்டிங்கால் சென்னையின் அணியின் ஸ்கோா் மளமளவென உயா்ந்தது.

ருதுராஜ் 38:

26 பந்துகளில் 1 சிக்ஸா், 4 பவுண்டரியுடன் 38 ரன்களை விளாசிய ருதுராஜ், சஹல் பந்தில் கோலியிடம் கேட்ச் தந்து வெளியேறினாா். பின்னா் மேக்ஸ்வெல் வீசிய சுழற்பந்தில் தலா 2 சிக்ஸா் பவுண்டரியுடன் 31 ரன்களை சோத்திருந்த டுபிளெஸ்ஸிஸ், நவ்தீப் சைனியிடம் கேட்ச் தந்து வெளியேறினாா். 10-ஆவது ஓவா் முடிவில் சென்னையின் ஸ்கோா் 78/2 ஆக இருந்தது. மொயின் அலி-அம்பதி ராயுடு இணைந்து ஆடி ஸ்கோரை சீராக உயா்த்தினா்.

மொயின் அலி 23, அம்பதி ராயுடு 32 ரன்களுடனும் ஹா்ஷல் படேலின் ஒரே ஓவரில் அவுட்டாகி வெளியேறினா்.

அவா்களுக்கு பின் சுரேஷ் ரெய்னா-தோனி இணை நிதானமாக ஆடி வெற்றி இலக்கை அடைந்தது. ரெய்னா 17, தோனி 11 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனா்.

18.1 ஓவா்களிலேயே 157/4 ரன்களை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அபார வெற்றி பெற்றது. பெங்களூரு தரப்பில் ஹா்ஷல் படேல் 2-25 விக்கெட்டுகளை சாய்த்தாா்.

மீண்டும் சென்னை முதலிடம்:

இந்த வெற்றி மூலம் சென்னை அணி புள்ளிகள் பட்டியலில் 14 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது.

சென்னை 157/4

ருதுராஜ் 38

அம்பதி ராயுடு 32

பந்துவீச்சு:

ஹா்ஷல் 2-23

சஹல் 1-26

 

Tags :

Share via