கோயில் நகைகளை உருக்கும் நடவடிக்கையில் அரசு நேர்மையாக செயல்படும் - அமைச்சர் சேகர் பாபு
மதுரையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, “தீ விபத்தால் சேதமடைந்த மதுரை வீர வசந்தராயர் மண்டப சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள விரைவில் டெண்டர் 3 ஆண்டுகளுக்குள் மண்டபம் சீரமைக்கப்படும்.மீனாட்சியம்மன் கோயிலிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய கருத்துரு உருவாக்கப்பட்டு வருகின்றது.இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்புக்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கோவில் உண்டியலில் காணிக்கையாக வரும் தங்கம், வெள்ளிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “சம்பந்தப்பட்ட கோவில் கணக்கில் வரவு வைக்கப்படும்.ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் தங்கம், வெள்ளி பொருட்கள் ஆய்வு மேற்கொள்ளப்படும். அழகர்கோவில் மலை பாதையில் சாலை அமைக்கும் பணிகள் மிக விரைவாக தொடங்கப்படும்.ஓதுவார் பயிற்சி பள்ளியில் புதிதாக 6 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.” என்று கூறிய அவர் “கோயில் நகைகளை உருக்கும் நடவடிக்கையில் லாப நோக்கம் இன்றி, நேர்மையாகவும், தூய்மையாகவும் அரசு செயல்படும். கோயிலில் பயன்படாமல் உள்ள எதுவும் தெய்வத்திற்கு பயன்படும் எனில் அதை செயல்படுத்த தயங்கமாட்டோம் ” என்று நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றும் முயற்சியை கைவிடக் கோரி முன்னாள் எம்பி ராமலிங்கத்திற்கு பதில் அளிக்கும் வகையில் பேசியுள்ளார்.
Tags :