கனமழை எச்சரிக்கை எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.. முழு விவரம்!!

by Editor / 30-11-2023 09:12:54am
 கனமழை எச்சரிக்கை எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.. முழு விவரம்!!

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் பழனி அறிவித்துள்ளார். கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, திருவள்ளூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போல், விழுப்புரம் , ராமநாதரபும் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் வழக்கம் போல் இன்று பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : கனமழை எச்சரிக்கை

Share via

More stories