உலகிலே செல்போன் தயாரிப்பதில் இந்தியா இரண்டாவது பெரிய நாடாக விளங்குகிறது -பிரதமர் நரேந்திரமோடி
மேக் இன் இந்தியா திட்டம் ஆரம்பித்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் இந்த இயக்கம் வெற்றி பெற்றதாகவும் நமது தேசத்தின் உற்பத்தி மற்றும் புதுமைகளின் அதிகாரம் மையமாக மாற்ற 140 கோடி இந்தியர்களின் கூட்டு உழைப்பை விளக்குவதாகவும் பல்வேறு துறைகளில் ஏற்றுமதி உயர்ந்துள்ளது. திறன்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இதனால் பொருளாதாரமும் வலுப்பெற்று வருகிறது. கடந்த 2021 ஆண்டில் மேக் இன் இந்தியா திட்டம் 1,556 கோடியாகவும் இன்றைக்கு அது ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 982 கோடியாகவும் கிட்டத்தட்ட 40.5 விழுக்காடு செல்லிடை பேசிகள் உருவாக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் உலகிலே செல்போன் தயாரிப்பதில் இந்தியா இரண்டாவது பெரிய நாடாக விளங்குவதாகவும்பிரதமர் நரேந்திரமோடிதம் எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.
மேக் இன் இந்தியா திட்டம் இந்திய அரசு மேற்கொண்டு வரும் சீர்திருத்தங்கள் தொழில்துறையில் பல்வேறு முன்னேற்றங்களை வடிவமைப்பதாகவும் இது முதலீட்டை எளிமையாக்குவதற்கும் புதுமைகளை வளர்ப்பதற்கும் திறன் மேம்பாட்டை மேம்படுத்துவதற்கும் அறிவு சார் சொத்துரிமையை பாதுகாப்பதற்கும் நாட்டின் சிறந்த உள் கட்டமைப்பை உருவாக்குவதற்கும் வடிவமைக்கப்பட்டதில் இது முக்கியமான ஒரு தேசிய திட்டமாக கருதப்படுகிறது.
Tags :