தூத்துக்குடியில் நடக்கும் பிரதமர் விழாவில் முதல்வர் பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குலசேகரப்பட்டினத்தில் வரும் 28ஆம் தேதி நடைபெறவுள்ள விழாவில் பிரதமர் நரேந்திர மோடியுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்க உள்ளார். குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டும் விழா வரும் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது. 2,233 ஏக்கரில் இஸ்ரோ சார்பில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுகிறது. முன்னதாக, வரும் 27ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறும் பாஜகவின் 'என் மண் எண் மக்கள்' நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி, அன்று இரவு சூலூரில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் தங்குவார்.
Tags :