தமிழகத்தில் ஜாதியை வைத்து அரசியல் பாஜக அண்ணாமலை பேச்சு

by Staff / 05-01-2024 05:24:34pm
தமிழகத்தில் ஜாதியை வைத்து அரசியல் பாஜக அண்ணாமலை பேச்சு

தமிழக முழுவதும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று ஜனவரி 4ம் தேதி எடப்பாடியில் நடைபெற்ற மேற்கொண்டார். எடப்பாடி வெள்ளாண்டி வலசு காளியம்மன் கோயில் முன்பு தொடங்கிய நடை பயணமானது எடப்பாடி பேருந்து நிலையம் அருகில் உள்ள சரபங்கா நதி பாலத்தில் நடை பயணம் நிறைவு பெற்றது. நடைபயணம் நிறைவு பெற்ற பிறகு அமைக்கப்பட்டிருந்த மேடையில் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை பேசும் போது தமிழகத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஜாதியை வைத்து அரசியல் நடத்தப்படுகிறது. எந்த ஜாதி எந்த தொகுதியில் அதிகமாக உள்ளதோ அந்த தொகுதியில் அந்த ஜாதியை சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்துவதே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். ஆனால் பாரத பிரதமர் மோடிஜாதிய அடிப்படையாகக் கொண்டு அரசியல் நடத்தப்படவில்லை இளைஞர்கள் மகளிர் விவசாயிகள் ஆகியோர்தான் அவருடைய ஜாதி அவர்களை மட்டுமே பாரத பிரதமர் மோடி நம்பியுள்ளார். என பேசினார் நடைப்பயணம் மேற்கொண்ட பொழுது லேசாக மழை பெய்ய தொடங்கியது நடை பயணம் முடிவுற்ற பிறகும் மேடையில் பேசும்போதும் மழை பெய்தது மலையில் நனைந்தவாறு அண்ணாமலை பேசி முடித்தார்.

 

Tags :

Share via