ஆப்கானிஸ்தானில் லேசான நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானின் வட கிழக்கு காபூலில் இன்று (வியாழக்கிழமை) பகல் 11.20 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆகப் பதிவான நிலநடுக்கமானது காபூலிலிருந்து 69 கி.மீ தொலைவில் 92 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
முன்னதாக ஆக-17 ஆம் தேதி ஆப்கனின் பைசாபாத் மாகாணத்தில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags :