பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு.
திருநெல்வேலி பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களில் இருந்து தாமிரபரணி பாசனத்தில் உள்ள நேரடி மற்றும் மறைமுக பாசனப்பரப்பு நிலங்களுக்கு கார் பருவ சாகுபடிக்கும் குடிநீர், இதர தேவைகளுக்கும் இன்று (ஜூன் 03) முதல் 02.10.2025 வரை தண்ணீர் திறக்க நீர்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, திருநெல்வேலி, பாளையங்கோட்டை உள்ளடக்கிய கிராமங்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தின் திருவைகுண்டம், ஏரல் உள்ளடக்கிய கிராமங்களில் உள்ள 46,786 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
Tags : பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு.



















