திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்.. ஏற்பாடுகள் தீவிரம்

by Editor / 06-11-2024 10:53:34am
திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்.. ஏற்பாடுகள் தீவிரம்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை (7)நடைபெற உள்ளது. இதில் பல லட்சம் பக்கங்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ள காவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் எஸ் பி ஆல்பர்ட் தலைமையில் நேற்று திருச்செந்தூரில் நடைபெற்றது. இதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட காவலர்களுக்கு ஆலோசனைகளை அவர் வழங்கினார்.

கந்த சஷ்டி பெருவிழாவையொட்டி, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் பக்தர்களின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த, கடற்கரையில் தடுப்பு வேலிகள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கந்த சஷ்டியை முன்னிட்டு இன்று (நவ., 06) இரவு 10.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறதுகுறிப்பிடத்தக்கது.

கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு 2 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில், 6 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 27 காவல் ஆய்வாளர்கள் உட்பட 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் திருச்செந்தூர் கோவில் வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டு குற்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க காவல்துறையினரின் பாதுகாப்பு பணிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.
 

 

Tags : திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்.. ஏற்பாடுகள் தீவிரம்

Share via