ஐந்து லட்ச ரூபாய் வரை காப்பீடு :ஐயப்ப பக்தர்களை குறி வைத்து மோசடி.

சபரிமலைக்கு இந்த ஆண்டு முதல் வரும் பக்தர்களுக்கு ஐந்து லட்ச ரூபாய் வரை காப்பீடு செய்யப்படும் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது. இதற்காக பக்தர்கள் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என்பது இத்திட்டத்தின் சிறப்பம்சம்
இந்த நிலையில் சபரிமலை பயணத்திற்கு பக்தர்கள் அரசு காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும் என சிலர் சமூக வலைதளங்கள் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் பக்தர்களை ஏமாற்றி வருவதாக புதுச்சேரி சைபர் கிரைம் பிரிவு போலீசார் எச்சரித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து சபரிமலை வரும் பக்தர்கள் காப்பீட்டு திட்டத்திற்காக கட்டணம் அல்லது காப்பீடு பதிவு எதுவும் செய்ய தேவையில்லை என்று கேரளா அரசு அதிகாரிகள் தெளிவுபடுத்தி உள்ளனர். இதுபோன்று யாரும் தொடர்பு கொண்டால் அவர்களிடம் விவரங்களை பணத்தையோ கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Tags : ஐந்து லட்ச ரூபாய் வரை காப்பீடு :ஐயப்ப பக்தர்களை குறி வைத்து மோசடி.