தலைமறைவான நடிகர் மன்சூர் அலிகான்

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில், நடிகர் மன்சூர் அலிகான் மீது நுங்கம்பாக்கம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் 2 பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு செய்து இன்று (நவம்பர் 23) விசாரணைக்கு ஆஜராக அவருக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். இதனைத் தொடர்ந்து முன் ஜாமின் கோரி சென்னை முதன்மை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் எனக் கூறப்பட்ட நிலையில், அவர் தலைமறைவானதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்போது அவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை காவல்துறையினர் அவரை தேடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Tags :