12ம் வகுப்பு புத்தகத்தில் சனாதனம் பகுதி நீக்கப்படும்

தமிழக பாடத் திட்டத்தில், 12 ஆம் வகுப்பு புத்தகத்தில் உள்ள சனாதனம் என்ற பகுதி நீக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். 12 ஆம் வகுப்பு புத்தகத்தில் இந்திய அறநெறியும் பண்பாடும் என்ற பாடத்தில், பல்வேறு மதங்கள் குறித்த விளக்கங்களில் சனாதனம் என்றால் நிலையான அறம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு விளக்கமளித்த அமைச்சர், அடுத்த ஆண்டு பாடத்திட்டம் மற்றும் புத்தகங்களில் சனாதனம் உள்ள பகுதி நீக்கப்படும் என தெரிவித்தார்.
Tags :