மூத்த தலைவர் நல்லக்கண்ணுவுக்கு பிறந்தநாள் நேரில் சென்று வாழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

by Editor / 26-12-2021 08:10:09pm
மூத்த தலைவர்  நல்லக்கண்ணுவுக்கு பிறந்தநாள்  நேரில் சென்று வாழ்த்திய  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் தோழர் நல்லக்கண்ணு தனது  97வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதன் தொடர்ச்சியாக கட்சியின் அமைப்பு தினம் மற்றும் தோழர் நல்லுக்கண்ணுவின் பிறந்தநாள் விழா, சென்னை தியாகராயர் நகரில் உள்ள கட்சியின்  அலுவலகத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று நல்லக்கண்ணுவுக்கு பொன்னாடை போர்த்தி தனது சார்பாகவும்,திமுக சார்பாகவும் வாழ்த்து தெரிவித்தார். முதல்வருடன் அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு உள்ளிட்டோரும், 

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், சுப்பராயன், சி.மகேந்திரன், வீரபாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகளும் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நல்லக்கண்ணுவை இன்னும் இளைஞராகவே பார்ப்பதாகவும், மக்களுக்காக இன்றும் போராட்ட இயக்கத்தில் அவர் இருந்து வருவதாகவும் புகழாரம் சூட்டினார்.


 

 

Tags :

Share via