நீலகிரி பாராளுமன்ற பாஜக வேட்பாளர் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் சிறப்புகள்

by Staff / 22-03-2024 12:10:49pm
நீலகிரி பாராளுமன்ற பாஜக வேட்பாளர் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் சிறப்புகள்

பெயர் : Dr. L.முருகன்,
            மத்திய இணை அமைச்சர்,
            முன்னாள் மாநிலத் தலைவர், தமிழக பா.ஜ.க.

கல்வி : LLB.,LBM.,Ph.d.,

பிறந்த இடம் : கோனூர், நாமக்கல்.

பெற்றோர்: திரு.லோகநாதன்-வரதம்மாள்.

மனைவி பெயர்: திருமதி. C.கலையரசி.

மகன்கள்: 1.தர்னேஷ்
                2.இந்திரஜித்.

தொழில் : வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்.

குறிப்பு : தமிழக பா.ஜ.கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவராக இருந்த பொழுது, கடவுள் முருகனின் கந்தசஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியவர்களுக்கு எதிராக, ‘வேல்யாத்திரை’ நடத்தியதன் மூலம், தமிழக அரசியலை புரட்டிப் போட்டவர்.

அரசியல் வாழ்க்கை: தமிழக பா.ஜ.க-வின் அடிப்படை உறுப்பினராக தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்கியவர், பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையத்தில் துணைத் தலைவராக பணியாற்றியுள்ளார்.

தன்னுடைய சீரான மற்றும் துணிச்சலுடன் கூடிய பணித் திறனால், தமிழக பா.ஜ.க-வின் மாநிலத் தலைவராகப் பணியாற்றி, தமிழக மக்களிடத்தில் கட்சியின் மீது தனிக்கவனம் பெறச் செய்துள்ளார்.

சுதந்திரத்திற்கு பிந்தைய மத்திய அமைச்சரவையில், அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த முதல் மத்திய இணை அமைச்சராக பொறுப்பெடுத்துக் கொண்டார்.

முதல்முறையாக பாராளுமன்ற தேர்தலில் மக்கள் களத்தில் கலக்க உள்ளார்  என பாஜகவினர் உற்சாக வெள்ளத்தில் உள்ளனர்.

 

Tags :

Share via