திண்டிவனத்தில் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் சிசிடிவி காட்சி வெளியீடு

by Staff / 25-11-2022 04:31:14pm
திண்டிவனத்தில் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் சிசிடிவி காட்சி வெளியீடு

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அரசு கோவிந்தசாமி கலைக்கல்லூரி மேல்பாக்கத்தில் இயங்கி வருகிறது இங்கு சுமார் 10,000 மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.இந்த நிலையில் ஒரு  இரு தரப்பு மாணவர்களிடையே பஸ்ஸில் செல்வதில் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது.
இதில் இரு தரப்பு மாணவர்களுக்கும் கல்லூரி வெளியே ஒருவருக்கொருவர்தாக்கிக் கொண்டனர். தாக்கிக் கொள்ளும் வீடியோ தற்பொழுது வெளியாகி உள்ளது.மேலும் அங்குள்ள ஆசிரியர்கள் கூறுகையில் கல்லூரி மாணவர்களிடையே தொடர்ந்து அப்பொழுது மோதல் நடைபெற்றவண்ணம் உள்ளது. மேலும் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் முன்னாள் மாணவர்களுடன் வெளி ஆட்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு சண்டையிடுவது தொடர்கதையாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.கல்லூரியில் இரண்டு ஷிப்டுகள் உள்ள நிலையில் இரண்டு ஷிப்டிலும் காவலர்கள் பாதுகாப்புக்கு நிற்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.மேலும் கல்லூரி சார்பாகவும் இது சம்பந்தமாககாவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via

More stories