கனிமவள லாரி மோதி கல்லூரி மாணவி பலி
கன்னியாகுமாரி மாவட்டம்.தூத்துரை சேர்ந்த மேரி சுஜா(42) மகள் ஷாலிகா (19) , இவர் தூத்தூர் கலை அறிவியல் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். நேற்று இவர் தனது உறவினர் வள்ளவிளையை சேர்ந்த கிறிஸ்துதாஸ் மகன் கிறிஸ்பினுடன்( 22), என்பவரின் மோட்டார் சைக்கிளில் சிதறால் மலைக்கோயில் சென்று உள்ளார்.பிற்பகல் வேளையில் வீட்டிற்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தனர் பைக்கை கிறிஸ்பின் ஓட்ட சானிகா பின்னால் இருந்துள்ளார்.மார்த்தாண்டம் மேம்பாலத்தில் வரும் போது டாரஸ் லாரியில் மோதி ஷாலிகா கீழே விழுந்து லாரியின் சக்கரம் ஏறி சம்பவ இடத்திலேயே பலியானார்.
கிறிஸ்பினின் இரண்டு கால்களும் முறிந்தது , அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் குழித்துறை அரசு மருத்துவமனையில் சானாகா -வின் உடல் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ளது. அங்கு அவரது உறவினர்கள் கதறி ஆளும் காட்சி அனைவரின் மனதையும் உருக்கியது. இந்நிலையில் கனரக லாரி ஓட்டி வந்த பைங் குளம் காப்பி காப்புகாட்டு விளையை சேர்ந்த சதீஷ்குமார் என்பது மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார், கனிம வள லாரிகளால் தொடர் விபத்துகள் ஏற்பட்டு உயிர் பலி ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் ஆதரிச்சி அடைந்துள்ளனர்.
Tags :



















