தீ விபத்து - 8 பேர் உடல் கருகி பலி

பிலிப்பைன்ஸ்: மணிலாவில் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். சான் இசிட்ரோ காலஸ் கிராமத்தில் உள்ள 3 தள குடியிருப்பு கட்டிடத்தில் நேற்று பிப்.26 நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த கட்டிடத்தின் பெரும்பகுதி மரத்தால் கட்டமைக்கப்பட்டிருந்ததால் தீ கட்டிடம் முழுவதும் பரவியது. இக்கோர விபத்தில் 8 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இதையடுத்து, போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :