வி.சி.க கட்சியின் கொடிக்கம்பம் கீழே விழுந்துள்ளது விழுந்ததற்கான காரணம் குறித்து மணல்மேடு காவல் ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டு வருவதாக மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு காவல் சரகம், குறிச்சி ராஜன் வாய்கால் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் சுமார் 10 அடி உயரத்தில் இரும்பு பைப்பினால் அமைக்கப்பட்டிருந்த வி.சி.க கட்சியின் கொடிக்கம்பம் கீழே விழுந்து கிடப்பதாக இன்று 27.02.2025-ம் தேதி காலை மணல்மேடு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இத்தகவலின் பேரில் மணல்மேடு காவல் ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சம்பவயிடத்தை நேரில் பார்வையிட்ட போது மேற்படி கொடிக்கம்பத்தின் அடிப்பாகத்திலிருந்து கொடிக்கம்பம் உடைந்தும், அந்த கொடிக்கம்பத்தின் அடிப்பாகமானது துருப்பிடித்தும் இருந்துள்ளது. மேற்படி கொடிக்கம்பம் கீழே விழுந்ததற்கான காரணத்தை கண்டுபிடிப்பது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய விசாரணை நடைமுறைகள் மற்றும் துரித நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு, இச்சம்பவம் தொடர்பாக மணல்மேடு காவல் ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டு வருகிறார் அன்று மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Tags :