1. 80 கோடி ரூபாய் போதைப்பொருள் கடத்தியவர் கைது.

சென்னை முடிச்சூர் அடுத்த வரதராஜபுரத்தை சேர்ந்தவர் சூர்யமூர்த்தி. இவர், 'மெத் ஆம்பெட்டமைன்' என்ற போதை பொருள் விற்பனை செய்வதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.பல்லாவரம் போலீசார், நேற்று காலை சூர்ய மூர்த்தியின் மொபைல் போன் டவரை சோதனை செய்தனர்.இதில், மெரினா கடற்கரையில் இருப்பதாக காண்பிக்கப்பட்டது. இதையடுத்து, தனிப்படை போலீசார், அங்கு விரைந்து, சூர்ய மூர்த்தியை மடக்கி பிடித்தனர். அவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில், 5. 800 கிலோ 'மெத் ஆம்பெட்டமைன்' என்ற போதை பொருள் கடத்தியது தெரியவந்தது.மேலும், கொடுங்கையூரைச் சேர்ந்த யூனஸ் என்கிற நபரிடம் இருந்து, போதை பொருளை சூர்ய மூர்த்தியும், ஜாம்பஜாரைச் சேர்ந்த முகமது ரபீக் என்பவரும் சேர்ந்து, விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.சூர்ய மூர்த்தியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட போதை பொருளின் சர்வதேச மதிப்பு, 1. 80 கோடி ரூபாய். தொடர்ந்து, சூர்ய மூர்த்தியை கைது செய்து, தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags :