இனி ஒரே டிக்கெட்டில் பயணிக்கலாம்: புதிய திட்டம்

சென்னையில் இயங்கும் மாநகர பேருந்துகள், மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் ஒரே டிக்கெட்டில் பயணிக்கும் புதிய திட்டம் விரைவில் அறிமுகமாக இருக்கிறது. சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்தின் கீழ், அனைத்து போக்குவரத்து சேவைகளையும் ஒருங்கிணைக்கும் பிரத்யேக செயலி (App) உருவாக்கம் நடைபெற்று வருகிறது. இந்த திட்டம் அடுத்த மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags :