15 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்; குற்றவாளிகளில் ஒருவர் தற்கொலை

by Staff / 07-09-2023 02:16:48pm
15 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்; குற்றவாளிகளில் ஒருவர் தற்கொலை

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் திங்கள்கிழமை, வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த 15 வயது சிறுமி கடத்தப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், குற்றவாளிகளில் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றொருவர் தலைமறைவாகவும் உள்ளார். சிறுமியை ஆட்டோரிக்ஷாவில் கடத்திச் சென்று மூன்று பேர் கும்பல் பலாத்காரம் செய்து சாலையில் விட்டுச் சென்றனர். ஆட்டோ டிரைவர்கள் ரூபேஷ், கருணா மற்றும் ஜெகதீஷ் ஆகியோர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்த நிலையில், கைதுக்கு பயந்து ஜெகதீஷ் வீட்டின் அருகே மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

 

Tags :

Share via

More stories