தமிழக முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் நான்கு நாள் ஓய்விற்காக இன்று கொடைக்கானல் சென்றுள்ளார்.

by Admin / 25-04-2026 02:02:20pm
தமிழக முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் நான்கு நாள் ஓய்விற்காக இன்று கொடைக்கானல் சென்றுள்ளார்.

நேற்று முன்தினம் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் நான்கு நாள் ஓய்விற்காக இன்று கொடைக்கானல் சென்றுள்ளார். இன்று காலை 10:15 மணியளவில் சென்னையிலிருந்து தனி விமான மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக கொடைக்கானல் சென்றார். அவர் 29 -ஆம் தேதி புதன்கிழமை மீண்டும் சென்னை திரும்புவார் என்று தகவல். இந்தப் பயணத்தில் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் சென்றுள்ளனர். கடந்த 2021 தேர்தல் முடிந்ததும் இதே போன்று அவர் கொடைக்கானலில் ஓய்வெடுக்கச் சென்று இருந்தார்என்பது குறிப்பிடத்தக்கது

 

Tags :

Share via
Logo