உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது-ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி பேட்டி.

சென்னை வெள்ள பாதிப்பு குறித்து காலை முதல் இரவு வரை முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் தொடர்ந்து அதிகாரியுடன் ஆய்வு கூட்டத்தை நடத்தி வருகின்றனர்.
ஒவ்வொரு நுழைவுப் பாலத்திலும் மழை வெள்ள பாதிப்பு குறித்து கேமரா அமைக்கப்பட்டும் ஆட்கள் நியமிக்கப்பட்டும் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது,ஒரு சில சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குவது என்பது சுரங்க பாதை அமைக்கும் போது ஏற்பட்ட சூழல் காரணமாக மழைநீர் தேங்கி நிற்கிறது அதனை ஒழுங்குபடுத்த முதல்வர் அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறார்.
ஒவ்வொரு முறையும் மழை வரும்போது ஏற்படும் பாதிப்புகள் குறித்து கணக்கிட்டு மீண்டும் அடுத்த முறை அந்த இடத்தில் பாதிப்பு ஏற்படாத வகையில் முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
சென்னையில் கூடுதலாக பெய்யக்கூடிய மழை அளவுகளை சமாளிக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.மழை குறித்து வெள்ள அறிக்கை மழை பாதிப்பு முடிந்த பிறகு முழுமையாக அரசின் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கையை குறித்து அரசின் சார்பில் வெள்ளை அறிக்கை வெளியிடலாம்,அதிகாரிகள் இரவு பகலாக மழை பாதிப்பு தொடர்பாக பொதுமக்களிடம் தொலைபேசி மூலம் வரும் புகார்களுக்கு உடனடியாக தீர்வு எடுத்து வருகிறார்கள்
தாழ்வான பகுதி உள்ளவர்கள் குறித்து குடிசை மாற்று வாரியத்தின் கீழ் கணக்கெடுக்கப்பட்டுள்ளது, அந்த இடத்தில் இருப்பவர்கள் வேறு இடத்திற்கு செல்ல மறுக்கிறார்கள் இது போன்ற சிக்கல்கள் இருப்பதால் இதனை சரி செய்ய அதிக காலம் தேவைப்படுவதால் இன்னும் ஐந்து ஆண்டுகளில் இந்த பிரச்சனை குறித்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த காலங்களில் ஏரிகளில் ஆக்கிரமிப்பு இருந்தது உண்மைதான் ஆனால் தற்போது எந்த ஏரிகளிலும் புதிய அரசு ஏற்பதல்ல உச்ச நீதிமன்றத்தின் உத்தரையின்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.சென்னை உள்ளிட்ட மழை பாதிப்புக்கு உள்ளான நான்கு மாவட்டங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் பெரிய பாதிப்புகள் இதுவரை இல்லை.
Tags : உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது-ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி பேட்டி.