தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி  பாராட்டு

by Editor / 28-06-2021 06:53:36pm
தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி  பாராட்டு

 


கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் சிறப்பாக செயல்படுவதாக, தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாகப் பரவிய நிலையில், அதனைக் கட்டுப்படுத்த சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அரங்கத்தில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்த தடுப்பூசி முகாமை தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். பின்னர், இதுகுறித்து தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:– அண்மை காலமாக, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக மேற்கொண்டுள்ளது என்று பாராட்டினார்.
மேலும் கூறும்போது,”கொரோனா தொற்று குறைந்து வருகிறது என்று மக்கள் அலட்சியமாக இருக்க கூடாது. வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணியுங்கள், அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்றும் வலியுறுத்திக் கூறினார்.

 

Tags :

Share via

More stories