சிவசங்கர் பாபாவை 3 நாட்கள் சிபிசிஐடி போலீசார் விசாரிக்க அனுமதி

by Editor / 28-06-2021 06:29:09pm
சிவசங்கர் பாபாவை 3 நாட்கள் சிபிசிஐடி போலீசார் விசாரிக்க அனுமதி

பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் 3 நாட்கள் விசாரிக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் கொடுத்த பாலியல் புகாரை அடுத்து அண்மையில் டெல்லியில் வைத்து சிவசங்கர் பாபா போலீசாரால் கைது செய்யப்பட்டு இருந்த நிலையில், அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவும் செய்யப்பட்டது.

அண்மையில் இவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து தற்போது சிவசங்கர் பாபாவை மூன்று நாட்கள் சிபிசிஐடி போலீசார் எடுத்து விசாரிப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories