நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பார்கி அணையில் ஒன்பது பேர் படகு விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

by Admin / 02-05-2026 05:03:34pm
 நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பார்கி அணையில்  ஒன்பது பேர் படகு விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

த்திய பிரதேசம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பார்கி அணையில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் உள்பட மொத்தம் ஒன்பது பேர் படகு விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

ஜபல்பூரில் உள்ள பார்கி அணையில் சுமார் 29 முதல் 31 சுற்றுலா பயணிகளுடன் சென்ற சொகுசு படகு திடீர் சூறாவளி மற்றும் பலத்த காற்றினால் நிலை தடுமாறி கவிழ்ந்தது. திருச்சியை சேர்ந்த காமராஜ் என்பவரது குடும்பத்தினர் காசி உள்ளிட்ட ஆன்மீக தலங்களுக்கு சென்று விட்டு ஜபல்பூர் சென்றிருந்தபோது இந்த விபத்தில் சிக்கினர். உயிரிழந்தவர்களில் சௌபாக்கியம், கார்குழலி, காமராஜ் ,மயூரான் மற்றும் தமிழ் வேந்தன் ஆகியோர் அடங்குவர். மொத்தம் ஒன்பது உடல்கள் நீக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு தாய் தனது நாலு வயது மகனை இறுக்கமாக கட்டினைத்தபடி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சம்பவ இடத்திற்கு விரைந்த மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் உள்ளூர் மக்கள் உதவியுடன் 15க்கு மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டனர் படைகள் பயணித்தவர்களில் பெரும்பாலோர் லைஃப் ஜாக்கெட் அணியாதது அதிகப்படியான உயிரிழப்புக்கு காரணமாக சொல்லப்படுகிறது. .போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாததே உயிரிழப்புக்கு காரணம் என்று சுற்றுலா பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்

 

 

Tags :

Share via
Logo