விவாகரத்து பெற்று மீண்டும் திருமணம்

by Staff / 30-11-2023 11:29:50am
விவாகரத்து பெற்று மீண்டும் திருமணம்

உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் நடந்த திருமணம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. வினய் ஜெய்ஸ்வால் மற்றும் பூஜா சவுத்ரி ஆகியோர் 2012 இல் திருமணம் செய்து கொண்டனர். 2018 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வினய்க்கு மாரடைப்பு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதை அறிந்த அவரது முன்னாள் மனைவி பூஜா அவரை சந்திக்க வந்தார். இந்த நிலையில் அவர்களுக்குள் மீண்டும் காதல் மலர்ந்தது. இதையடுத்து அவர்கள் கடந்த 23ஆம் தேதி மீண்டும் திருமணம் செய்து கொண்டனர். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via