விஜயகாந்த் பூரண நலம்பெற பிராத்தனை: சரத்குமார்

by Staff / 30-11-2023 11:25:33am
விஜயகாந்த் பூரண நலம்பெற பிராத்தனை: சரத்குமார்

விஜயகாந்த் உடல்நிலை குறித்து நடிகரும், சமக தலைவருமான சரத்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தேமுதிக தலைவரும், நெருங்கிய நண்பருமான விஜயகாந்த் பலமுறை மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்று, உடனடியாக திரும்பி இருக்கிறார்கள். ஆனால், அவரது உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் சீரான நிலையின்றி, நுரையீரல் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் வெளியிட்ட அறிக்கை மிகுந்த மனவேதனை அளிக்கிறது. மக்கள் நலனுக்காக பல்வேறு நற்பணிகளை மேற்கொண்ட அன்பு நண்பருக்கு அளிக்கப்பட்டு வரும் தீவிர சிகிச்சை பலனளித்து, விரைவில் பூரண நலத்துடன் இல்லம் திரும்ப நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து பிரார்த்திப்போம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via