தமிழக வெற்றி கழகம்ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாக போர்ஜரி கடிதத்தை தயாரித்து ஆளுநரிடம் கொடுத்துள்ளது-டிடிவி தினகரன்
அம்மாமுன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் என்று அடையாறில் செய்தியாளர்களை சந்தித்தார். தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாக போர்ஜரி கடிதத்தை தயாரித்து ஆளுநரிடம் கொடுத்துள்ளார்கள்.. எங்களுடைய எம்.எல்.ஏ கையெழுத்து போடுவது போன்ற வீடியோ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டது. அதனை வெளியிட வேண்டும் என்றும் அவர் சினிமாவில் பெரிய ஹீரோவாக இருக்கலாம் .108 எம்.எல்.ஏக்களை பெற்றிருக்கலாம்.. அவருக்கு நாங்கள் ஆதரவு அளிக்க அவர் என்ன மாமனா, மச்சானா என்றும் காட்டமான வார்த்தைகளை உதிர்த்தார். தங்களிடம் இருப்பதே ஒரே ஒரு எம்எல்ஏ தான் அவரையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று முயல்வது என்ன அரசியல் நாகரிகம் என்றும் கேள்வியை எழுப்பினார். காமராஜ் 10 ஆண்டுகளாக எங்கள் கட்சியில் மாவட்ட செயலாளராக இருக்கிறார். அவர் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஏதோ ஒரு கடிதம் எழுதிய வீடியோவை வைத்து இதுபோன்று செய்திருக்கிறார்கள். உண்மையில் அவர் எழுதிக் கொடுத்ததாக சொல்லக்கூடிய அந்த கடிதத்தையும் வீடியோவும் வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
Tags :


















