காதல் விவகாரம்; இளைஞர் கழுத்தை அறுத்துக்கொலை

by Editor / 09-05-2026 01:23:04pm
காதல் விவகாரம்; இளைஞர் கழுத்தை அறுத்துக்கொலை

விருதுநகர் சிவகாசி அருகே செவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் பிரபாகரன். அதே கிராமத்தைச் சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்புடைய சுரேஷின் மகளைக் காதலித்து வந்துள்ளார். பெண்ணின் தந்தை சுரேஷ் பலமுறை கண்டித்தும் பிரபாகரன் கேட்காததால், சுரேஷ் மற்றும் அவரது நண்பர் சேர்ந்து கண்மாயில் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் பிரபாகரனின் கழுத்தை அறுத்து கொலை செய்து கண்மாயில் வீசிச் சென்றனர். ம. புதுப்பட்டி போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via
Logo