இயற்கை வளங்களை அழிப்பதை அனுமதிக்கக் கூடாது: சீமான்

by Editor / 05-06-2026 04:55:03pm
இயற்கை வளங்களை அழிப்பதை அனுமதிக்கக் கூடாது: சீமான்

தொழில் வளர்ச்சி என்ற பெயரில் நிலம், நீர், காற்று, மலை, காடு, அருவி, ஆறு, கடல் போன்ற இயற்கை வளங்களை மாசுபடுத்தி அழித்தொழிப்பதை அனுமதிக்கக் கூடாது என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், ரசாயன ஆலைக்கழிவுகள், காடுகள் அழிப்பு, மலைகள் வெட்டப்படுதல், ஆற்று மணல் சுரண்டல் போன்றவை வருங்கால தலைமுறைக்கும், உயிரினங்களுக்கும் பச்சைத்துரோகம் ஆகும். மரங்களை வெட்டிவிட்டு, கடல் நீரைக் குடிநீராக்குவதும், காற்றை மாசுபடுத்திவிட்டு நல்ல காற்றை வாங்குவதும் அறிவுக்குப் புறம்பானது என கூறியுள்ளார்.

 

Tags :

Share via
Logo