லாரி டியூப்களில் பதுக்கி வைத்திருந்த 300 லிட்டர் சாராயம் பறிமுதல்

by Editor / 22-02-2023 11:13:02pm
 லாரி டியூப்களில் பதுக்கி வைத்திருந்த 300 லிட்டர் சாராயம் பறிமுதல்

   சேலம் மாவட்டம் கல்வராயன் மலை வனப்பகுதியில் மர்ம கும்பல் சிலர் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி அதனை லாரி டியூப்கள் மூலம் கடத்தி வரப்பட்டு ஆத்தூர், தலைவாசல், கல்லானத்தம், வீரகனூர், கெங்கவல்லி  அதன் சுற்றுவட்டார பகுதியில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தொடர்ந்து புகார்கள் சென்றது, அதன் பேரில் போலீசார் தனிப்படை அமைத்து சாராய வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர், இதனிடையே தலைவாசல் அருகே மணிவிழுந்தான் காலனி இராமானுஜபுரம் பகுதியில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் லாரி டியூப்களில் சாராயம் பதுக்கி வைத்திருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது, அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் பெரியசாமி மகன் சேகர் என்பவருடைய விவசாய தோட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர், அப்போது மாட்டு தீவன பயிர்களுக்கு இடையே ஏழு லாரி டியூப்களில் பதுக்கி வைத்திருந்த 300 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் தலைமறைவான பிரபல சாராய வியாபாரி சேகரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்,

 

Tags :

Share via