புதிய அமைச்சர்கள் இன்று மாலை ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு.

by Editor / 28-04-2025 08:15:54am
புதிய அமைச்சர்கள் இன்று மாலை ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு.

தமிழ்நாடு அமைச்சரவையில் நீதிமன்றத்தின் கண்டிப்பு காரணமாக  அமைச்சர்  செந்தில் பாலாஜி மற்றும் பொது இடத்தில் பெண்களை ஆபாசமாக பேசி சிக்கலில் மாட்டிக்கொண்ட அமைச்சர் பொன்முடி ஆகியோர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அதன்படி, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாக மின்சாரத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதலாக மதுவிலக்கு மற்றும் ஆயதீர்வைத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு வனத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று (ஏப்.28) மாலை ஆளுநர் மாளிகையில் பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் என கூறப்படுகிறது.

 

Tags : புதிய அமைச்சர்கள் இன்று மாலை ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு.

Share via

More stories