கீழடி போராட்டம் டெல்லியிலும் எதிரொலிக்கும்

கீழடி ஆய்வறிக்கையை அங்கீகரிக்க மறுத்த மத்திய அரசுக்கு எதிராக நேற்று மதுரை மற்றும் சென்னையில் திமுக மாணவர் அணி சார்பாக போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தை பாராட்டியுள்ள முதல்வர் ஸ்டாலின், "கீழடி தமிழர் தாய்மடி எனத் தமிழரின் பண்பாட்டுப் பெருமையை நிலைநாட்டும் வரை கழகத்தின் போராட்டம் ஓயாது!. இந்த போராட்டம் டெல்லியிலும் எதிரொலிக்கும்" எனத் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
Tags :