அக்.22-ம் தேதியும் விடுமுறை..?

by Staff / 19-10-2025 09:54:55am
 அக்.22-ம் தேதியும் விடுமுறை..?

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று செல்கின்றன. ஏற்கனவே, தமிழக தலைமை செயலக சங்கம் கோரிக்கையை ஏற்று தீபாவளிக்கு மறுநாளான அக்.21 விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அக்.22-ம் தேதியும் விடுமுறை வழங்க பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து தமிழக அரசு விரைவில் பரிசீலித்து முடிவெடுக்கும் எனத் தெரிகிறது.

 

Tags : அக்.22-ம் தேதியும் விடுமுறை

Share via