திருமணத்திற்கு முன் கர்ப்பமான மகளை கொன்ற தாய்

மகாராஷ்டிர மாநிலம் ஃபல்கர் மாவட்டத்தில் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான மகளை தாயே கொன்றுள்ளார். இந்த சம்பவம் பிப்., 19 தேதி நடந்துள்ளது. முதலில் இயற்கை மரணம் என்று போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். பின்னர், விசாரணையில், மற்றொரு 17 வயது மகளின் உதவியுடன் தாய் தனது கர்ப்பிணி மகளின் கழுத்தில் கயிற்றை இறுக்கி கொன்றது அம்பலமாகியுள்ளது. தற்போது கொலைக் குற்றம் சாட்டப்பட்ட தாயை போலீசார் கைது செய்து வழக்கப்பதிவு பதிவு செய்துள்ளனர்.
Tags :