வடகிழக்கு பருவமழை துவங்கியது;தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் தயார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் மீட்பு பணியில் ஈடுபட ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் தலா 30 பேர் கொண்ட 5 குழுக்கள் மற்றும் ஒரு குழு சென்னையில் தயார் நிலையில் உள்ளது.அரக்கோணம் அடுத்த நகரிகுப்பத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை மேலாண்மைமையத்தில் மீட்பு உபகரணங்கள் ரப்பர் படகுகள், கயிறு, உயிர் காக்கும் கருவிகள், மற்றும் ஆழ்நிலை நீர் மூழ்கி வீரர்கள், மோப்ப நாய்கள் உள்ளிட்டவை களுடன் 150 பேர் அடங்கிய 5 குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர். சென்னையில் 30 பேர் கொண்ட ஒரு குழுவும், திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரத்தில் 30 பேர் கொண்ட ஒரு குழுவும் தயார் நிலையில் உள்ளனர்கள். மேலும் 24*7 அவசர கட்டுப்பாடு மையம் செயல்படுகிறது. மேலும் மாநிலம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 *7 அவசர கட்டுப்பாடு மையத்துடன் இணைத்து செயல்பட்டு வருகின்றனர்.. மேலும் மழைவெள்ள பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் விரைந்து செல்ல மீட்பு வாகனங்களுடன் தயார் நிலையில் உள்ளனர் .என்று தேசிய பேரிடர் மீட்புப் படை NDRF 04 படை பிரிவின் துணை கமாண்டன்ட் பிரவீன் பிரசாத் தகவல் வெளியிட்டுள்ளார்.
Tags : வடகிழக்கு பருவமழை துவங்கியது;தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் தயார்.