மும்பை மெட்ரோ விபத்து

by Admin / 16-02-2026 01:28:26am
 மும்பை மெட்ரோ விபத்து


மும்பையின் முலுண்ட் பகுதியில் லால் பகதூர் சாஸ்திரிசாலையில் மதியம் 12:15 மணியளவில், கட்டுமானத்தில் இருந்த மெட்ரோ தூணின் மேல்பகுதிதிடீரென சரிந்து கீழே சென்ற ஆட்டோ மற்றும் கார் மீது விழுந்தது. ஆட்டோவில் பயணித்த ராம்தானி யாதவ் (46) என்பவர் உயிரிழந்தார். மேலும் ஆட்டோ ஓட்டுநர் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.கவனக்குறைவாக இருந்ததாகக் கூறி திட்ட மேலாளர் உள்ளிட்ட 5 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஒப்பந்த நிறுவனத்திற்கு ₹5 கோடி அபராதம் விதிக்கப்பட்டு, ஒரு நிர்வாக பொறியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

இதே போல்பெங்களூரு நகருக்கு வெளியே துமகுரு நெடுஞ்சாலையில் ஜிண்டால் மேம்பாலம் அருகே சனிக்கிழமை இரவு 11:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.துமகுருவிலிருந்து பெங்களூரு நோக்கி அதிவேகமாக வந்த டாடா இண்டிகா கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில்மோதி, எதிர் திசையில் வந்த கர்நாடக மாநில அரசுப் பேருந்துமீது நேருக்கு நேர் மோதியது.
காரில் பயணம் செய்த 5 இளைஞர்கள் உயிரிழந்தனர். அவர்கள் அனைவரும் தொட்டபல்லாபூரைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். காரின் முன்பகுதி முற்றிலுமாக நொறுங்கியது. பேருந்தில் இருந்த 42 பயணிகளும் காயமின்றி உயிர் தப்பினர். 

 

Tags :

Share via

More stories

Logo