காசா பகுதியில்  இஸ்ரேல் நடத்திய  வான்வழி தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர்.

by Admin / 16-02-2026 12:33:44am
 காசா பகுதியில்  இஸ்ரேல் நடத்திய  வான்வழி தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர்.

ஞாயிற்றுக்கிழமை  காசா பகுதியில்  இஸ்ரேல் நடத்திய  வான்வழி தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர் என்று பாலஸ்தீன சுகாதாரம் மற்றும் மீட்பு படையினர்  தெரிவித்துள்ளனர். வடக்கு காசாவில் உள்ள ஜபாலியாவிற்கு மேற்கே உள்ள பலுஜா பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கி  இருந்த  கூடார முகாம் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் நான்கு முதல் ஆறு பேர் வரை கொல்லப்பட்டனர். தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸ் பகுதியில்  நடத்தப்பட்ட மற்றொரு  தாக்குதலில் ஐந்து பேர் உயிரிழந்தனர் காசா நகரத்தின் தென்மேற்கே உள்ள  தல் ஹவா  பகுதியிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .  போர்  நிறுத்த ஒப்பந்தத்தை  மீறியதற்கு பதிலடியாகவே  இந்த  தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய  பாதுகாப்பு படைகள்  தெரிவிக்கின்றன. கடந்த  அக்டோபர் மாதம் முதல் நடைமுறையில் இருக்கும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு பிறகு காசாவில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 600 தாண்டி உள்ளது என சுகாதார துறை தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo