தெலுங்கானா மக்களுக்கு மழை எச்சரிக்கை

by Staff / 12-12-2022 02:29:03pm
தெலுங்கானா மக்களுக்கு மழை எச்சரிக்கை

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் ஆந்திரா மற்றும் தமிழகத்தில் எல்லையை கடந்துள்ளது. இதனால் தமிழகம் மற்றும் ஆந்திராவில் இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும் இன்றும் நாளையும் தெலுங்கு மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக தெலுங்கானாவில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி குளிர் காலம் என்பதால் மழையில் தாக்கம் காரணமாக குளிரின் தீவிரம் அதிகமாக இருக்கலாம் என வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories