போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

by Editor / 24-03-2023 10:05:09am
 போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி குத்துக்கல்வலசை பகுதியைச் சார்ந்தவர் முனியாண்டி இவரது மகன் பாண்டி என்கின்ற ராஜா இவர் நேற்று இரவு 23ஆம் தேதி அன்று தென்காசியில் நடைபெற்ற திமுகவினுடைய பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அந்த வழியாக வந்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிகவும் போலீசாரை தரை குறைவாக பேசி உள்ளார்.இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியத்தைத்தொடர்ந்து  இது குறித்து தென்காசி போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து இன்று பாண்டி என்கின்ற ராஜா வை கைது செய்தனர்.

இதேபோன்று சங்கரன்கோவில் அருகிலுள்ள சின்ன கோவிலாங்குளம் ஈச்சம் பொட்டல்புதூர் பகுதியில் இரு பிரிவினருக்கு ஏற்கனவே மோதல் இருந்து வருவதால் அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் குறிப்பிட்ட பிரிவை சார்ந்த ஒரு சமுதாயத்தினர் அந்தப் பகுதி வழியாக மேளதாளங்களுடன் சென்றதாக கூறப்படுகிறது. போலீசார் பாதுகாப்பு பணியில் குறிப்பிட்ட பகுதியில் இருந்ததைத்  தொடர்ந்து மேளதாளங்களை அடிக்காமல் அமைதியாக சென்று கொண்டிருந்த பொழுது செந்தட்டியாபுரம் காலனி தெருவை சேர்ந்த மருதநாயகம் மகன் பிரவீன் குமார் என்பவர் மேளதாளங்களை அடிக்க வைத்து போலீசாரிடம் தகாத முறையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் இதன் தொடர்ச்சியாக சின்ன கோவிலாங்குளம் போலீசார் அவரை இன்று கைது செய்தனர். தென்காசி மாவட்டத்தில் காவல் துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் இன்று கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Tags : police speech

Share via

More stories