சபரிமலையில் வைகாசி மாத பூஜைக்காக இன்று மாலை நடை திறப்பு.

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகள் மட்டும் ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் ஐந்து நாட்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், வைகாசி மாத பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்படுகிறது.
ஐயப்பன் கோயிலில் மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரர் ராஜீவ் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி தீபாராதனை காண்பிக்க உள்ளார். பின்னர் 18-ம் படிக்கு கீழ் பகுதியில் உள்ள கற்பூர ஆழியில் தீ மூட்டப்படும்.
இதையடுத்து நாளை (வியாழக்கிழமை) முதல் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து வழக்கமான பூஜை, வழிபாடுகளுக்கு பின் இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. தொடர்ந்து 19 ம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு இரவு 10 மணிக்கு ஹரிவாரசனம் பாடி நடை சாத்தப்படுகிறது.
Tags : சபரிமலையில் வைகாசி மாத பூஜைக்காக இன்று மாலை நடை திறப்பு.